திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கீழ முன்னீர்பள்ளம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் அருண்பாண்டியன் என்ற மகாராஜன் (24). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே போல் தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் கோபி கிருஷ்ணா (20). என்பவர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முன்னீர் பள்ளம் காவல் ஆய்வாளர் வேல்ராஜும், ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (19.08.2025) அன்று அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு இந்த வருடத்தில் மட்டும் இதுவரை கொலை, கொலை முயற்சி கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 69 நபர்கள் மீதும், பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட 21 நபர்கள் மீதும், போதை பொருட்களை விற்பனை செய்த 11 நபர்கள் என மொத்தம் 101 குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் , சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்