திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, கீழத்தெருவை சேர்ந்த கோமு என்பவரின் மகன் தம்பால்(21). என்பவரும், முன்னீர் பள்ளத்தை சேர்ந்த சங்கரலிங்கம் என்ற சங்கர்,(25). ஆகிய இருவரும் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர், வேல்கனிக்கும், முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர், சுரேஷ் ஆகியோரின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (23.12.2024) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்