திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் ஐயப்பன்(19). மற்றும் மாரிமுத்து மகன் தங்கதுரை(20). ஆகியோர் மீது திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் V.கீதா திருநெல்வேலி டவுன் சரக காவல் உதவி ஆணையர், செந்தில்குமார் மற்றும் திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப, வின் உத்தரவின்படி (01.10.2024)-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்