திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து காமிலா நகரை சேர்ந்த கருத்தபாண்டி என்பவரின் மகன் வெயில்குமார் என்ற கொக்கிகுமார் (29). குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை, போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் தாழையூத்து காவல் ஆய்வாளர், சபாபதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (22.06.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்