திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட வன்னிகோனந்தல், அரசமர தெருவை சேர்ந்த வினோத் (21). வன்னிகோனந்தல், நடுத் தெருவை சேர்ந்த வெனிஷ் குமார் (25). ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இருவரும் கொலை மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் கவனத்திற்கு வந்ததால், குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (21.02.2025) அன்று அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்