திருநெல்வேலி: திருநெல்வேலி, முன்னீர்பள்ளம், மேல கருங்குளத்தைச் சேர்ந்தவர் மகாராஜா, (25). பல வழக்குகளில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ளார். இவர் தொடர்ந்து கொலை முயற்சி மற்றும் அடிதடி, கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர், சுரேஷ் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், மஹாராஜா(19.11.2024)அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்