திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம்,களக்காடு, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி, கொள்ளை, வழக்கில் ஈடுபட்ட ஜெ.ஜெ.நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கொம்பையா (22) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக நாங்குநேரி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், மீராள் பானு (பொறுப்பு) கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில்* (17.09.2024) அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்