திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில்; வழிப்பறி, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுண், சிவா தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வசூர்யா (18). என்பவர் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் மரு.V.பிரசண்ணகுமார், இ.கா.ப., (மேற்கு), காவல் உதவி ஆணையர் திரு.அஜுக்குமார் (டவுண் சரகம்), திருநெல்வேலி டவுண் காவல் ஆய்வாளர் திருமதி.ஜூடி (பொறுப்பு டவுண் குற்றம்) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அவர்களின் ஆணைப்படி (27.10.2025)-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
















