திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் கைப்பேசி திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல் தொடா்பான வழக்குகளில் ஈடுபட்ட திருநெல்வேலி, கொக்கிரகுளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சங்கரநாராயணன்(23). கைதாகியிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், வி.வினோத் சாந்தாராம், (கிழக்கு) பாளையங்கோட்டை சரக காவல் உதவி ஆணையர், என்.சுரேஷ் ஆகியோர் பரிந்துரையின் பேரில், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., உத்தரவுப்படி சங்கரநாராயணன், பாளையங்கோட்டை மத்திய சிறையில் (18.05.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்