திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் அருகே சுப்பையாபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசைதம்பி, மகன் கண்ணன் (19). மேல தாழையூத்து, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி, மகன் இசக்கிதுரை (22). ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மானூர் வட்டக் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப.,விற்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் (26.03.2025) அன்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்