திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சேதுராயன்புதூர் மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுதன் (22). அடிதடி மற்றும் கொலை வழக்கில் காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர். இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரைத்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவின் பேரில், மானூர் வட்டக் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் சுதனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்