திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட சேரன்மகாதேவி, பாரதிதாசன் தெருவை சேர்ந்த மாயாண்டி மகன் சுப்பிரமணியன் (21). மூலக்கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வகுமார் (23). ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர், தர்மராஜ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (16.03.2025) அன்று அடைத்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்