திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கீழநத்தம் மேலூர், சண்முகவிலாஸ் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி என்பவரை (20.12.2024) தேதியன்று முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் பாளையங்கோட்டை திருச்செந்தூர் ரோட்டில் வெட்டி கொலை செய்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த மனோராஜ், தங்க மகேஷ். முத்துகிருஷ்ணன், முருகன் என்ற சிவா என்ற சிவமுருகன், பார்வதி கண்ணன், ராமகிருஷ்ணன் என்ற சுந்தரலிங்கம், கண்ணன் ஆகியோரை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம், (கிழக்கு) பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர், N.சுரேஷ் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர், க.தில்லை நாகராஜன் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. உத்தரவுப்படி (21.01.2025)- அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்