திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய மேலப்பாளையத்தைச் சேர்ந்த அமீர் சுகைல்(24). முஸ்ஸமில் முர்சித்(21). பெருமாள்புரம் ரத்தினபாலன்(38). திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் ஷேக் ஒலி (26). சாகுல் ஹமீது (26). ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதே போல பாளையங்கோட்டை, எம்.கே.பி. நகரைச் சேர்ந்த பால்துரை மகன் ரவிக்குமார் (49). என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம்,(கிழக்கு) காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ.மணிவண்ணன், இ.கா.ப., உத்தரவுப்படி அமீர் சுகைல், முஸ்ஸமில் முர்சித், ரத்தினபாலன், சிக்கந்தர் ஷேக் ஒலி, சாகுல் ஹமீது, ரவிக்குமார் ஆகிய 6 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (24.01.2026) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















