நெல்லை: அருகே கட்டுடையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்ற மொங்கான் 29,மூன்றடைப்பு அருகே வாகைக்குளம் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் நல்லத்துறை என்ற பாண்டி 22,மகன் சங்கிலிபூதத்தான் 20, சதீஷ் ராஜா 21, முத்துக்கிருஷ்ணன் 25, குரு சச்சின் 24 இவர்கள் 6-பேரும் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.
மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டு வந்ததால் இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன், மாவட்ட ஆட்சியர் திரு.வே.விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்று தாழையூத்து போலீசார் இவர்கள் ஆறு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை.,மத்திய சிறையில் அடைத்தனர்.