நெல்லை: நெல்லை சாலை தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டி 32, முத்து சுரேஷ் 22 இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளை.,மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல்துறை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) திரு.சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் திரு.செந்தாமரைக் கண்ணன் பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து போலீசார் சங்கரபாண்டி, முத்து சுரேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை., மத்திய சிறையில் அடைத்தனர்.