நெல்லை: மேலப்பாளையம் நாகம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற பசுபதி அம்மு (22). இவர் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்கும்,உவரி அருகே உள்ள கூடுதாழை அந்தோணியார் குருசடி தெருவை சேர்ந்த சுயம்பு என்பவரின் மகன் லிங்கதுரை (வயது 33). இவர் போக்ஸோ வழக்கில் உவரி போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி திரு.மணிவண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.வே.விஷ்ணு உத்தரவிட்டார்.
லிங்கதுரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், வெங்கடேஷ் என்ற பசுபதி அம்மு வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.