திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட எட்டாங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த ஸ்ரீரங்கம் மகன் மகாராஜன் என்ற அய்யாக்குட்டி(22). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் கவனத்திற்கு வந்ததால், அவரை குண்டர் தடுப்புச் சட்டப்பிரிவு 14-ன் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், மகாராஜன் என்ற அய்யா குட்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (04.07.2025) அன்று அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்