திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை மலையாளமேடு, லஜபதி நகரைச் சேர்ந்த பரமசிவன் மகன் மாரிசெல்வம் (30). என்ற உழுவை பரமசிவன். இவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவரை மாநகர காவல் துணை ஆணையர், V.கீதா, காவல் உதவி ஆணையர், K.அஜுகுமார், டவுன் காவல் ஆய்வாளர், பொ.கோபாலகிருஷ்ணன், ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., ஆணைப்படி (14.02.2025) அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்