திருநெல்வேலி: திருநெல்வேலி, தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த செல்லதுரை மகன் ராமர் என்ற ஜெயராமர் (30). இவர் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், V.கீதா, சந்திப்பு சரக காவல் உதவி ஆணையர் (பொறுப்பு) ஆவுடையப்பன், தச்சநல்லூர் காவல் ஆய்வாளர், முத்து கணேஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., ஆணைப்படி (04.02.2025)- அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்