திண்டுக்கல்: பழனியில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி காவல்துறையினர் லந்தக்கோட்டையை சேர்ந்த அஜித்(19) என்ற வாலிபரை கடந்த 24-ம் தேதி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அஜித்தின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு எஸ்பி. சீனிவாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் விசாகன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து அஜித்தை சத்திரப்பட்டி ஆய்வாளர் லட்சுமி பிரபா தலைமையிலான போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா