நெல்லை: நெல்லை மாவட்டம், அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பா இவரது மகன் பேச்சிகணேஷ் 22.இவர் மீது கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பேச்சிகணேசை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பேச்சி கணேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.