திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்டதாக கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள பற்பநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு (எ) அன்பன் (26). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அவரை, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. பிரசன்னகுமார், இ.கா.ப., பரிந்துரைத்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவின் பேரில் அன்பு என்ற அன்பன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (09.01.2026) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















