திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தாழையூத்து, செல்வம் என்ற தமிழ்செல்வம் (25). சுபாஷ் (23). பல்லிகோட்டை, ராஜகோபால் என்ற சின்னராஜா (22). ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மேற்படி நபர்கள் கொலை முயற்சி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் கவனத்திற்கு வந்ததால், குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் மூன்று பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (03.12.2024) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்