திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரை கொலை செய்த வழக்கில் ஈடுபட்ட கொம்பையா என்ற கார்த்திக், (21). ஐயப்பன் என்ற சசி (19). பெருமாள்(68). ஆகிய மூவர் மீது திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் S.விஜயகுமார், (கிழக்கு) டவுன் சரக காவல் உதவி ஆணையர் செந்தில்குமார், பேட்டை காவல் ஆய்வாளர், ஜூடி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின்படி மூவரும் (29.11.2024) அன்று பாளை மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்