திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கூடங்குளம், காந்திநகரை சேர்ந்த சித்திரை செல்வன் மகன் லிங்குசாமி (22). கூடங்குளம், சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த வினோத் (39). திசையன்விளையை சேர்ந்த அருண்குமார் (21). ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொலை, கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை, மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் கூடங்குளம் காவல் ஆய்வாளர், ரெகுராஜன் ( பொறுப்பு ) குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்ததால் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (09.09.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்