திருநெல்வேலி: திருநெல்வேலி கீழநத்தம் திம்மராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் நம்பிநாராயணன் (23). இவர், பாலியல் வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் ஏ.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி,இ.கா.ப., பிறப்பித்த உத்தரவுபடி, நம்பிநாராயணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்