தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலியூரில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான காசிமேஜபுரம் வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் செண்பகம்(43). கணேசன் என்பவரின் மகன் ராமசுப்பிரமணியன்@ ரமேஷ்(25). மணிகண்டன் என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (24). மற்றும் குற்றாலம் குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் மணிகண்டன் @ புறா மணி (32). ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நான்கு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.