திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உக்கிரன்கோட்டை, தெற்கு தெரு, முத்துசிவா (21). உக்கிரன்கோட்டை, சிவன் கோவில் தெரு, இசக்கிபாண்டியன் (19). உக்கிரன்கோட்டை, வடக்கு தெரு, இசக்கிபாண்டி என்ற விக்னேஷ் (18). அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, நந்தன்தட்டை, நடுத் தெரு இசக்கிபாண்டி (18). ஆகிய நான்கு பேரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர்கள் மீது மானூர் காவல் ஆய்வாளர், சந்திரசேகர் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 – யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., க்கு, வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், நான்கு நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் (11.10.2024) அன்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்