திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கூம்பூர் அருகே தொக்குவீரன் பட்டியில் கடந்த 11-ம் தேதி பாலசுப்பிரமணியன் என்பவரை கொலை செய்த வழக்கில் விமல் ராஜை(19) கூம்பூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விமல்ராஜின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு எஸ்பி.சீனிவாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் விசாகன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா