திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்தவரை மிரட்டி, பணம் பறித்தது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த அன்பழகன் (51). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், மரு வி.பிரசன்னகுமார், (மேற்கு) பரிந்துரையை ஏற்று, காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., பிறப்பித்த உத்தரவின் பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அன்பழகன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (23.12.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















