திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த குத்தாலம் மகன் பூா்ண ஆனந்த் (31). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதனிடையே, மக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் இவர் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் தர்மராஜ் விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N .சிலம்பரசன், இ.கா. ப., பரிந்துரையின்பேரில், பூா்ண ஆனந்தை தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியார் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பூர்ண ஆனந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















