திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக, அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (25). என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N.சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் ரா. சுகுமாரின் உத்தரவின் பேரில், சண்முகசுந்தரத்தை காவல் ஆய்வாளர், ரமேஷ் கண்ணன் (18.03.2025) அன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்