திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை சேர்ந்தவர் நம்பிராஜன். (22). இவர் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் ஆய்வாளர், சுந்தரியின் கவனத்திற்கு வந்ததால் அவர் விடுத்த வேண்டுகோளின் பேரில் மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம்,(கிழக்கு) பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப, ஆணைப்படி (09.01.2025)-அன்று நம்பிராஜன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்