திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கொலை முயற்சி வழக்கில் மறுகால்குறிச்சி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் இசக்கி பாண்டி (25). கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மேற்படி நபர் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக
நாங்குநேரி காவல் ஆய்வாளர், சாகுல் ஹமீது கவனத்திற்கு வந்ததால், குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், இசக்கி பாண்டியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் (01.01.2024) இன்று அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்