திருநெல்வேலி: திருநெல்வேலி அருகன்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (21). தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக்(20). இவர்கள் இருவரும் பாளையங்கோட்டை பகுதியில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, மாநகர காவல் துணை ஆணையர், வினோத் சாந்தாராம் (கிழக்கு) பரிந்துரைத்தார். இதையடுத்து மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப, உத்தரவின்பேரில் ஜாபர் சாதிக், கார்த்தி ஆகியோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (26.10.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















