திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அயன் திருவாலீஸ்வரம், வடக்கு தெருவை சேர்ந்த முப்பிலிபாண்டி என்பவரின் மகன் பேச்சி , (26). மற்றும் மூன்றடைப்பு மலையன்குளம் மேல தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் மகன், சண்முகவேல் (21). ஆகிய இருவரும் கொலை, கொலை முயற்சி, திருட்டு மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர், மகேஷ்குமார், மற்றும் நாங்குநேரி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், சங்கரேஸ்வரிக்கும் தெரிய வந்ததால், மேற்படி குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., பரிந்துரையின் படி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் 09.11.2024 அன்று அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாத