திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, ராம் நகரில் வசிக்கும் மகாராஜன் மகன் மந்திரமூர்த்தி தச்சநல்லூர் ஊருடையார்புரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது கிருஷ்ணாபுரம், மேட்டுக்குடியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் காளிமுத்து(21). மற்றும் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த வேல்முருகன் மகன் சுரேஷ்(24). ஆகியோர் பணம் பறிக்கும் நோக்கத்துடன் அவரை மிரட்டியுள்ளனர்.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்த காளிமுத்து மற்றும் சுரேஷ் இருவரையும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், (மேற்கு,) V .கீதா, காவல் உதவி ஆணையர், சந்திப்பு சரகம் வெங்கடேசன், தச்சநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், மா.முத்து கணேஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப, ஆணைப்படி (24.10.2024)-ஆம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்