நெல்லை: நெல்லை அருகே சிறுக்கன்குறிச்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் இவரது மகன் முண்டன் என்ற சுடலைமுத்து 31.இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சீதபற்நல்லூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் நெல்லை சேதுராயன் புதூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் சுந்தர் ராஜ்(28) இவர் மீது மானூர் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் அவர்களின் பரிந்துரையின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் திரு.வே.விஷ்ணு உத்தரவிட்டார்.
இதையடுத்து சுந்தர் ராஜ் மற்றும் சுடலைமுத்து ஆகியோர் குண்டர் சட்டத்தில் பாளை., மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.