நெல்லை: நெல்லை அருகே உள்ள மானூர் பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி மகன் சுரேஷ் என்ற சுரேஷ்குமார் 31 இவர்மீது அப்பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.மானூர் திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் பெரியசாமி(38)இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அளித்த பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு அவர்கள் உத்தரவின் படி சுரேஷ்குமார்,பெரியசாமி இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.