திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட சுத்தமல்லி, கீழதெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தங்கப்பாண்டி (20). தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த கொம்பையா என்பவரின் மகன் தங்க மாரியப்பன் (20). ஆகிய இருவரும் சிறையில் உள்ளனர். இருவரும் பொதுமக்களை கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வருவதாக சுத்தமல்லி காவல் ஆய்வாளர், சோனமுத்து கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (03.01.2024) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்