திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வடக்கு அரியநாயகிபுரம், மேல ரத வீதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மகன் ஆதிகணேஷ் (23). அதே ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அர்ச்சுணன் (30). ஆகிய இருவரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மேற்படி குற்றவாளிகளை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர், தர்மராஜ் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 – யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர், கா.ப.கார்த்திகேயன்,இ.ஆ.ப., உத்தரவின் பேரில், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் (23.09.2024) இன்று பாளை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்