திருநெல்வேலி : திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி மகன் கணேஷ் முத்துகுமார்(37). அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் முருகபெருமாள்(27). மதியழகன் மகன் ரமேஷ்(24). கோவிந்தசாமி மகன் சக்திவேல்(28). லூர்து அற்புதராஜ் மகன் அலெக்ஸ் சற்குணம்(27). மற்றும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரவி சுப்பையா மகன் முத்துகுமார்(26). ஆகியோர் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், வினோத் சாந்தாராம் (கிழக்கு) பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்