திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மதியழகன் மகன் அருண்ராஜ். இவர் டவுண் ரயில்வே பீடர் ரோடில் வந்து கொண்டிருந்த பொழுது டவுன், முகமது அலி தெருவைச் சேர்ந்த முகமது அமான் மகன் நிகாஷ் நசீர்(19). என்பவர் அவரை வழிமறித்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டியுள்ளார். ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடைய நிகாஷ் நசீர் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், V.கீதா, (மேற்கு) டவுன் சரக காவல் உதவி ஆணையர் செந்தில்குமார், டவுன் காவல் நிலைய காவல் ஆய்வாளர், கோபாலகிருஷ்ணன், பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப, உத்தரவுப்படி (22.01.2025)-அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்