திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் வெங்கடேஸ்வரபுரம், வடக்கு தெருவை சேர்ந்த அகிலாண்டேஸ்வரன் (27). என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மானூர் காவல் துறையினரால் வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்த அசோக் ரத்தினராஜ் (35). இம்மானுவேல்ராஜா (27). பாரதி (27). பொன்ராஜ் (29). ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதில் அசோக் ரத்தினராஜ் (35). கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக, மானூர் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்ட பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., வின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி குற்றவாளியான அசோக் ரத்தினராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (12.11.2024) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்