திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த கொடிமுத்து(42). மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மேல கோட்ட வாசல் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (32). ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா், கீதா (மேற்கு) பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., பிறப்பித்த உத்தரவுப்படி, குண்டர் தடுப்புக் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்