திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட கண்ணன் என்பவரின் மகன் திவாகர் (25). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திசையன்விளை காவல் ஆய்வாளர், சீதாலட்சுமி கவனத்திற்கு வந்ததால், குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா ப.,வின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி, திவாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் 29.01.2025 அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்