திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் அடிதடி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட , கோவில் குளத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா (20). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி மற்றும் மிரட்டல் வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., வின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், இசக்கி ராஜா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (19.04.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்