கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.நல்லசிவம் அவர்கள் மேற்பார்வையில் களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் போலி முகவரி கொண்ட காரில் புகையிலை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பானக்குடி விளைவீடு பகுதியைச் சேர்ந்த குருவன் @ விஷ்வநாதன் என்பவரது மகன் சசி @ சசிகுமார் (45). விரிவிளை பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவரது மகன் விஜய் பிரதீப் (34). என்பவர்களை கைது செய்து அவர்கள் வைத்திருந்த 225 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
















