நீலகிரி : கர்நாடகா மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு திரு.ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.மகேஷ்குமார், தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இருப்பினும் போதைப்பொருட்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.மகேஷ்குமார் கூறியதாவது கூடலூர் உட்கோட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக நடப்பாண்டில் இதுவரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 50,608 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு கஞ்சா வைத்திருந்ததாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 77 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 6987 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.